2025 ஜூலை 30, புதன்கிழமை

மன்னாரில் மாதா திருச்சொரூபம் திருட்டு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 01 , மு.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னாரில் 178 வருடங்கள் பழைமை வாய்ந்த அடைக்கல மாதா திருச்சொரூபம் ஒன்று திருட்டுப் போயுள்ளதாக முருங்கன் பொலிஸ் நிலையத்தில் ஆலய நிர்வாக சபையினர் முறைப்பாடு செய்துள்ளனர்.

மன்னார், நானாட்டான் பகுதியில் அமைந்துள்ள புனித அடைக்கல மாதா ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த 178 வருடங்கள் பழைமை வாய்ந்த அடைக்கல மாதா திருச்சொரூபமே திருட்டுப் போயுள்ளதாக ஆலய நிர்வாக சபையினர் தெரிவித்தனர்.

நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கும் 7 மணிக்கும் இடைப்பட்ட வேளையில் குறித்த ஆலயத்திற்குச் சென்ற இனந்தெரியாத நபர்கள், கண்ணாடிப் பேழையினுள் வைக்கப்பட்டிருந்த ஒன்றரை அடி உயரம் கொண்ட அடைக்கல மாதா திருச்சொரூபத்தை வெளியில் எடுத்துள்ளதுடன்,  இந்தச் திருச்சொரூபத்திற்கு போடப்பட்டிருந்த ஆடையை களட்டி அதே இடத்தில் வைத்துவிட்டு திருச்சொரூபத்தை கொண்டு சென்றுள்ளதாக ஆலய நிர்வாக சபையினர் கூறினர்.

குறித்த ஆலயத்தில் பணி புரிகின்ற ஒருவர், ஆலயத்திற்குச் சென்று பார்த்தபோது மாதா திருச்சொரூபம் அங்கு இல்லாமை தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் ஆலய நிர்வாக சபையினர் கூறினர்.

இந்த நிலையில், முருங்கன் பொலிஸார் நேற்று திங்கட்கிழமை குறித்த ஆலயத்திற்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தடயங்களை கண்டறியும் பொருட்டு மோப்ப நாய் கொண்டு வரப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .