2025 ஜூலை 30, புதன்கிழமை

கைவினைப்பொருள் கண்காட்சி

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 02 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் வலயக் கல்வி அலுவலகமும் முறைசாராக் கல்விப் பிரிவும் இணைந்து நடத்திய கைவினைப்பொருட்களின் கண்காட்சி இன்று புதன்கிழமை நடைபெற்றது.

மேலும், முறைசாராக் கல்விப் பிரிவினால் நடத்தப்பட்ட தொழிற்பயிற்சியில் கலந்துகொண்டு தொழிற்பயிற்சியை பூர்த்தி செய்த இளைஞர், யுவதிகள் உருவாக்கிய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

அத்துடன், இந்த தொழிற்பயிற்சியை பூர்த்தி செய்த இளைஞர், யுவதிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

மன்னார் வலயக் கல்விப் பணிமனையின் முகாமைத்துவ மண்டபத்தில் மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.சியான் தலைமையின் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனும் கௌரவ விருந்தினராக மன்னார் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் என்.ஏ.துரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .