2025 ஜூலை 30, புதன்கிழமை

கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டதாக சிறுவன் முறைப்பாடு

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 02 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -எஸ்.கே.பிரசாத்

முல்லைத்தீவைச் சேர்ந்த 14 வயதுச் சிறுவன் தன்னை இனந்தெரியாத நபர்கள் கடத்திச்சென்று விடுவித்துள்ளதாக பொலிஸில் பொய் முறைப்பாடு செய்துள்ளதாக முல்லைத்தீவுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவைச் சேர்ந்த ஜெகநாதன் கவிஞன் என்ற 14 வயது சிறுவனை கடந்த 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு வாகனத்தில் வந்த நால்வர் கடத்திச் சென்றதாகவும், அந்த வாகனத்தில் கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் பெண்ணொருவரும் இருந்ததாகவும் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

தன்னை கடத்தியவர்கள்  மறுநாள் காலை 6.30 மணிக்கு கருநாட்டு கேணியில் கொண்டு வந்துவிட்டார்கள் என சிறுவன் கூறியதாக, பெற்றோரால் நேற்று முன்தினம் திங்கட்கிழமை முல்லைத்தீவுப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பாக முல்லைத்தீவு பொலிஸாரைத் தொடர்புகொண்டு கேட்டபோது,

சிறுவனைத் தாங்கள் விசாரித்ததில், தனியார் கல்வி நிறுவனத்தின் வகுப்பிற்கு செல்லாமல் ஒளிந்திருந்துவிட்டு, பெற்றோர்களுக்கு பயந்தே சிறுவன் மறுநாள் இவ்வாறு பொய் சொல்லியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வற்றாப்பளை பிரதேசத்தினைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தாயார் ஒருவர் கடந்த 30ஆம் திகதி பிற்பகல் முதல் காணாமற் போயிருந்ததாகவும், பின்னர் இன்று மாலை 4 மணிக்கு அவர் வீடு திரும்பியுள்ளதாகவும் அப்பகுதி கிராம அலுவலர் தெரிவித்துள்ளார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .