2025 ஜூலை 30, புதன்கிழமை

மூன்றுமுறிப்பு அ.த.க. பாடசாலையில் வகுப்பறை தீக்கிரை

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 03 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}



-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா, மூன்றுமுறிப்பு அ.த.க. பாடசாலையின் மகிழ்வுகூட வகுப்பறை ஒன்று இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

ஆரம்பப்பிரிவு மாணவர்களின் உளநல மேம்பாட்டுக்காக பாடசாலை மாணவர்களினுடைய பெற்றோர்களினால் அமைக்கப்பட்டிருந்த மகிழ்வுகூட வகுப்பறையே நேற்று புதன்கிழமை இரவு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக அந்தப் பாடசாலையில் அதிபர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து  இன்று வியாழக்கிழமை காலை பாடசாலைக்கு வருகை தந்த வட மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தீக்கிரையாக்கப்பட்டுள்ள  வகுப்பறையை பார்வையிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .