2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

மதவாச்சியில் விபத்து: ஒருவர் பலி; ஒருவர் காயம்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 04 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரொமேஷ் மதுசங்க


மதவாச்சி, கல்கந்தேகம பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழ்ந்துள்ளதுடன் மேலும் ஒருவர் கடும்காயங்களுக்குள்ளான நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மதவாச்சி போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்- கண்டி ஏ9 பாதையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

எண்ணெய் பவுஸர் ஒன்றும் லொறியொன்றும் நேருக்கு நேர் மோதிகொண்டதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில்,  எண்ணெய் பவுஸரை செலுத்திச் சென்ற சாரதி ஸ்தலத்திலே பலியாகியுள்ளதுடன் அதில் பயனித்த மேலும் ஒருவர் கடும்காயங்களுக்கு உள்ளான நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முரத்தலாவ, கஹவதுகொட பிரதேசத்தைச் சேர்நத சுகன் நிலவீர என்ற 48 வயதுடைய நபரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.

லொறியின் சாரதி நித்திரையில் வாகனத்தை செலுத்தியதால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பில்; பொலிஸார் தொடர்ந்தும விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .