2025 ஜூலை 30, புதன்கிழமை

நெடுங்கண்டல் கிராமத்தில் வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 04 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் மாவட்டத்தின்  மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட நெடுங்கண்டல் கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட 55 வீடுகள் பயனாளிகளிடம் நேற்று வியாழக்கிழமை கையளிக்கப்பட்டன.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மீள்குடியேறிய மக்களுக்காக போர்த்துக்கல் கரிட்டாஸ் இலங்கை செடேக்' அமைப்பின் மூலமாக கிடைத்த நிதியுதவியுடன் நெடுங்கண்டல் கிராமத்தில் இந்த 55 வீடுகளையும் மன்னார் வாழ்வோதயம் அமைப்பு நிர்மாணித்துக் கொடுத்துள்ளன.

இந்த நிலையில், ஒவ்வொரு வீடும் 6 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப் ஆண்டகை, போர்த்துக்கல் நாட்டு கரிட்டாஸ் தலைவர் பொன்சேக்கா, இலங்கை தேசிய கரிட்டாஸ் இயக்குநர் அருட்பணி யோர்ஜ் சிகாமணி அடிகளார், மன்னார் வாழ்வோதய இயக்குநர் அருட்பணி ஜெயபாலன் அடிகளார் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .