2025 ஜூலை 23, புதன்கிழமை

வீட்டிலிருந்தவர்களைத் தாக்கிவிட்டு கொள்ளை

Kanagaraj   / 2014 ஜனவரி 04 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் தற்காலிக கொட்டகை வீட்டில் வசித்து வந்தவர்களை கறுப்புத் துணியினால் தங்களுடைய முகத்தினைக் கட்டியிருந்த  கொள்ளையர்கள் நால்வர், தாக்கிவிட்டு கழுத்திருந்த தாலிக்கொடி உள்ளிட்ட சுமார் 3 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை இன்று அதிகாலை கொள்ளையடித்து சென்றுள்ளதாக புதுக்குடியிருப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த கணவன், மனைவியினை கொள்ளையர்கள்,  தாக்கி விட்டு, மனைவியின் கழுத்திலிருந்த 4.5 பவுண் தாலிக்கொடி மற்றும் அங்கிருந்த இரண்டு கைத்தொலைபேசிகள் உள்ளிட்ட ரூபா 3 இலட்சம் பெறுமதியான பொருட்களையே கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கொள்ளையர்கள் தாக்கியதில் கணவன், மனைவிக்கு தெய்வாதீனமாக எதுவித காயங்களும் ஏற்படவில்லை என்று தெரிவித்த பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .