2025 ஜூலை 23, புதன்கிழமை

உடையார்கட்டு விபத்தில் ஒருவர் காயம்

Menaka Mookandi   / 2014 ஜனவரி 05 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, உடையார்கட்டுப் பகுதியில் மோட்டார் சைக்கிளும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயமடைந்து சுயநினைவிழந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் நேற்றிரவு (04) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பரந்தனிலிருந்து உடையார்கட்டு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் புதுக்குடியிருப்பிலிருந்து உடையார்கட்டுக்கு சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டியும் ஏ - 35 வீதி, உடையார்கட்டு பகுதியில் வைத்து நேருக்கு நேர் மோதிக்கொண்டுள்ளது.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், சுய நினைவிழந்து இருப்பதினால் யார் என்று அடையாளம் காணமுடியவில்லையென புதுக்குடியிருப்புப் பொலிஸார் இன்று (05) தெரிவித்தனர்.

விபத்தை அடுத்து முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டு, புதுக்குடியிருப்புப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .