2025 ஜூலை 23, புதன்கிழமை

வவுனியா மாவட்ட பிரச்சனைகள் தொடர்பாக ஆராயும் கூட்டம்

Super User   / 2014 ஜனவரி 12 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா மாவட்ட அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் நாளை காலை 9.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

வட மாகாண சபையின் அபிவிருத்தி திட்டத்தில் மாவட்ட ரீதியில் மேற்கொள்ளப்படும் திட்ட முன்மொழிவுகளுக்கான ஆராய்வு கூட்டத்தின் இறுதி அமர்வே இந்த கூட்டமாகும்.வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் தலைiயில் இடம்பெறவுள்ளது.

வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பிரதேச செயலகங்களின் கீழ் செயற்படும் அமைப்புக்களின் பிரதிதிகளுடனான கலந்துரையாடல்கள் கடந்த வாரங்களில் இடம்பெற்றன. இதனை தொடர்ந்து இடம்பெறும் இந்த கூட்டத்தில், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களை தீர்மானிக்கும் கூட்டமாக இது அமையவுள்ளது.

இந்த கூட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், வவுனியா மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .