2025 ஜூலை 23, புதன்கிழமை

கிளிநொச்சியில் அனர்த்த முகாமைத்துவச் செயலமர்வு

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 17 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்


கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கனகபுரம் நண்பர்கள் விருந்தினர் விடுதியில் அனர்த்த முகாமைத்துவச் செயலமர்வு  நடைபெற்று வருகின்றது.

ஒக்ஸ்பாம் பிரித்தானியாவின் நிதி அனுசரணையில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை ஆரம்பமாகி 03 நாட்களாக நடைபெற்றுவருகின்ற இந்தச் செயலமர்வில்,  அனர்த்தங்களிலிருந்து பாதுகாப்பு பெறுவது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படுகின்றன.

கரைச்சி பிரதேச செயலர் கோபாலபிள்ளை நாகேஸ்வரன் தலைமையிலான  இந்தச் செயலமர்வில், கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உத்தியோகத்தர் பத்மநாதன் சுதர்சன் வளவாளராக கலந்துகொண்டுள்ளார்.

கரைச்சி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள அனர்த்த முகாமைத்துவக் குழுக்களைச் சேர்ந்த 40 கிராம மட்ட அங்கத்தவர்களும் மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டுள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .