2025 ஜூலை 23, புதன்கிழமை

வடமாகாண சுகாதார மேம்பாடு தொடர்பான திட்டமிடல் கூட்டம்

Kogilavani   / 2014 ஜனவரி 23 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


நவரத்தினம் கபில்நாத்


வட மாகாணத்தின் சுகாதார மேம்பாடு தொடர்பான திட்டமிடல் கூட்டமொன்று புதன்கிழமை (22) வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப. சத்தியலிங்கம் தலைமையில்  வடமாகாண சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நடைபெற்றது.

வட மாகாணத்தின் எதிர்கால சுகாதார திட்டங்கள் தொடர்பில் நீண்டகால, குறுகிய கால அடிப்படையில் சுகாதாரதேவைகளை இனங்கண்டு வேலைத்திட்டங்கள் தயாரிப்பது தொடர்பில் இக்கூட்டத்தில்; கலந்துரையாடப்பட்டது.

இந்த திட்டத்தை தயாரிப்பதற்காக சுகாதாரதுறையின் உபதுறைகளின் அடிப்படையில் வைத்திய நிபுணர்கள், துறைசார் நிபுணர்கள் உள்ளடங்களாக 16 உபகுழுக்கள் சுகாதார அமைச்சரினால் உருவாக்கப்பட்டுள்ளன.

இக்கூட்டத்தில் துறைசார் பேராசிரியர்கள், வைத்திய நிபுணர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்பின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .