2025 ஜூலை 23, புதன்கிழமை

வவுனியாவில் இரு மொழி உதவு நிலையம் திறந்துவைப்பு

A.P.Mathan   / 2014 ஜனவரி 27 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்
 
வவுனியா மாவட்ட அரச உத்தியோகத்தர்களுக்கும் மக்களுக்கும் இடையில் நிலவிவரும் மொழிசார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகமாக, மஹிந்த சிந்தனை திட்டத்தின் கீழ், இருமொழி உதவு நிலையம் ஒன்று மொழி ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயகாரவினால் இன்று (27) வவுனியா மாவட்ட செயலகத்தில் திறந்து வைக்கப்பட்டது.
 
கலாசாரம், பண்பாடு, மொழி அடையாளங்களை பேணிப்பாதுகாக்கப்படவேண்டும் என்றும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இரு மொழிக்கொள்கை மற்றும் மொழிசார்ந்த ஒருமைப்பாட்டை அவசியம் பேணிப் பாதுகாக்கவேண்டுமென்ற நோக்கோடு இந் நிலையம் திறந்துவைக்கப்பட்டதாக அமைச்சர் வாசுதேவ இங்கு தெரிவித்தார்.
 
இந் நிகழ்வில் மொழி ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, மொழி ஒருமைப்பாட்டு அமைச்சின் அதிகாரிகள், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர், ஜனாதிபதி செயலகத்தின் வவுனியா இணைப்பாளர் சிவநாதன் கிசோர், வவுனியா மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர்கள், அரச திணைக்கள அதிகாரிகள் ஊழியர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .