2025 ஜூலை 23, புதன்கிழமை

இந்திய வீட்டுத்திட்டத்தில் பிரச்சினைகள் இராது: சுஜாதா மேத்தா

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 30 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

இந்திய வீட்டுத்திட்டத்தில் பிரச்சினைகள்  இருக்காது என்று தான் எண்ணுவதாக  இந்திய வெளிவிவகார அமைச்சின் விசேட செயலாளர் சுஜாதா மேத்தா தெரிவித்தார்.

வவுனியாவில் மேற்கொள்ளப்படுகின்ற இந்திய வீட்டுத்திட்டங்களை  இன்று வியாழக்கிழமை பார்வையிட்ட பின்னர், வீட்டுத்திட்ட பயனாளிகளுடன் நடைபெற்ற  சந்திப்பில் அவர்  இவ்வாறு கூறினார்.

இந்தச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

'வீடொன்று இருந்தால் அது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமையும் என்பது எமது ஆழ்ந்த நம்பிக்கை. இந்த வீட்டுத்திட்டம் உங்களின் வாழ்க்கையில் மிகவும் சௌகரியமாக அமையும் என நம்புகின்றோம்.

வாழ்க்கையில் திருப்புமுனையாகவும் நல்ல எதிர்காலத்தை நோக்கிச் செல்லவும் இந்திய வீட்டுத்திட்டம் வாய்ப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.

இந்த நிலையில், வீட்டுத்திட்டத்தில் ஏதாவது பிரச்சினைகள் இருக்குமாயின்  யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்திலோ அல்லது தேசிய வீடமைப்பு அதிகாரசபையிலோ முறையிட முடியும். இந்த நிலையில், நாம் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கு வசதியாக இருக்கும்.
உங்கள் அனைவரதும் ஒத்துழைப்பில் இனிமேல் நாம் செய்யும் வீட்டுத்திட்டத்தை எந்தவித பிரச்சினைகளும் இல்லாது அமைப்பதற்கு வசதியாக இருக்கும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .