2025 ஜூலை 23, புதன்கிழமை

முசலி பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம்

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 14 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் அப்பிரதேச செயலகத்தில் வியாழக்கிழமை (13) நடைபெற்றது.

இதன்போது  கல்வி, சுகாதாரம், மின்சாரம், குடிநீர், உள்ளக வீதிகள் உட்பட பல விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன.

முசலி பிரதேச அபிவிருத்திக்குழுத் தலைவரும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினருமான ஹுனைஸ் பாரூக் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன்,  திணைக்ளத் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து முசலி பிரதேச செயலகத்தில் அமைக்கப்பட்ட முசலி பிரதேச ஒருங்கிணைப்புக்குழு காரியாலயத்தை ஹுனைஸ் பாரூக் திறந்துவைத்தார்.

இதன்போது, திவிநெகும திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள 52 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன.

23 பேருக்கு நீரிறைக்கும இயந்திரங்கள், மீன்பிடி வலைகள், விவசாய தெளிகருவிகளும்  29 பேருக்கு கால்நடை வளர்ப்பதற்கான உதவிகளும் வழங்கப்பட்டன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .