2025 ஜூலை 23, புதன்கிழமை

'அனைத்து சமூகங்களினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவராக அமைச்சர் றிசாத் மாறியுள்ளார்'

Super User   / 2014 பெப்ரவரி 16 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனைத்து சமூகங்களினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தலைவராக அமைச்சர் றிசாத் பதியுதீன் மாறியுள்ளார் என வட மாகாண சபை உறுப்பினர் வீ.ஜயதிலக்க தெரிவித்தார்


வன்னி மாவட்ட மக்களுக்கு அவர் மேற்கொள்ளும் சிறந்த பணிகளை மேற்கொள்வதனால் முஸ்லிம் சமூகத்திற்கு மட்டும் தலைவராக அல்லாமல் வன்னி மாவட்டத்தில வாழும் அனைத்து சமூகங்களினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு தலைவராக மாறியுள்ளார் என மாகாண சபை உறுப்பினர் குறிப்பிட்டார்.


வட மத்திய மாகாண சபைக்குட்பட்ட இக்கிரிகொல்லாவ சாளம்பை புர பாடசாலையில் இடம்பெற்ற பரிசளிப்பு நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

"யுத்தத்தினால் வடக்கில் வாழ்ந்த தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் பல பாதிப்புக்களை சந்தித்தனர். அகதிகளாக வெளியேற்றப்பட்டனர். இந்த வெளியேற்றத்தினால் இழந்தவைகள் ஏராளம். கடந்த 2009ஆம் ஆண்டிற்கு பின்னர் சமாதானம் ஏற்படுத்தப்பட்டதனால் மீண்டும் மக்கள் மீள்குடியேறியுள்ளனர்.

இந்த சூழ்நிலையில் எமக்கான அளப்பரிய சேவைகளை அமைச்சர் றிசாத் பதியுதீன் ஆற்றியுள்ளார். அவர் தொடர்பில் சிலர் இனவாதம் பேசுகின்றனர்.அவரிடத்தில் அவ்வாறான சிந்தனையில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதையெல்லாம் செய்ய முடியுமோ அதனை இடைவிடாது செய்துவரும் ஒரு சிறந்த தலைவரே றிசாட் பதியுதீன் ஆவார்.

வட மாகாண சபை தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பட்டடியிலில் போட்டியிட்ட சிங்கள சமூகத்தை சேர்ந்த என்னை வெற்றி பெறச் செய்துள்ளார். முஸ்லிம் மக்கள் எனக்கும் வாக்களித்தனர் என்பதை இங்கு நன்றியுணர்வுடன் நினைவு கூர்கின்றேன். தொடர்ந்து இந்த அமைச்சரின் அபிவிருத்தி பணிகளுக்கு வட மாகாண சபையில் இருக்கும் வன்னி மாவட்டத்தின் மூன்று உறுப்பினர்களின் ஒத்துழைப்பும் என்றும் இருக்கின்றது" என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .