2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

இராணுவத்தினால் மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டி அன்பளிப்பு

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 21 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


கிளிநொச்சி இராணுவ தலைமைகத்தினால் வறுமைப்பட்ட குடும்பங்கைள சேர்ந்த மாணவர்கள் 34பேருக்கு இன்று (21) துவிச்சக்கரவண்டிகள் அன்பளிப்பு செய்யப்பட்டிருந்தது.

ஒஸ்திரிய நாட்டுப் பெண்மணியான ராணி பயரின் நிதி பங்களிப்பில் கிளிநொச்சி இராணுவ ஒத்துழைப்பு மையத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் கிளிநொச்சி பிராந்திய இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் சுசந்த ரணசிங்க, ஒஸ்திரிய நாட்டு பெண்மணி ராணி பயர் மற்றும் கிளிநொச்சி பிராந்திய இராணுவ தளபதிகள், பிரிகேடியர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .