2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

தமிழ் யுவதிகளிடமிருந்து இராணுவம் விண்ணப்பம் கோருகிறது

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 23 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர். ரஸ்மின்

இலங்கை இராணுவத்தின் மகளிர் படையணியில் இணைந்துகொள்ள விருப்பமுடைய முல்லைத்தீவு மாவட்ட தமிழ் பேசும் இளம் யுவதிகளிடமிருந்து இலங்கை இராணுவ மகளிர் படையணி விண்ணப்பங்களை கோரியுள்ளது.

இது தொடர்பான துண்டுப்பிசுரங்கள் நேற்றைய தினம் (22) முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இராணுவத்தினரால் விநியோகம் செய்யப்பட்டன.

திருமணமாகாத 18 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்ட  8ஆம் தரம் அல்லது 9ஆம் தரத்தில் சித்தி பெற்றிருப்பதுடன், விளையாட்டுத்துறை, பொறியியல், பான்ட்வாத்தியம், உள்ளிட்ட வேறு துறைகளில் தேர்ச்சியுள்ளவர் இப்பதவிக்கு விண்ணப்பிக்க முடியும்.

அத்துடன், ஆங்கில அறிவு, கணணி அறிவு என்பன விஷேடமாக கவனத்தில் கொள்ளப்படவுள்ளன. மகளிர் படையணியில் இணைந்து கொள்ளும் தொண்டர் சிப்பாய்க்கு  மாதாந்தம் 30 ஆயிரம் ரூபா வரை கொடுப்பனவு வழங்கப்படுவதுடன், இலவசமாக சீருடை, உணவு, தங்குமிட வசதி, மருத்துவம், வான்மை விருத்தி பயிற்சி என்பனவும் வழங்கப்படவுள்ளன.

அத்துடன் 15 வருடகால சேவையின் பின்னர்  ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ள முடியும். குறித்த மகளிர் படையணியில் இணைந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் தமது விண்ணப்பப் படிவங்களை 591ஆவது படையணி - முல்லைத்தீவு, 592ஆவது படையணி நாகன்சோலை, 593ஆவது படையணி-நாயாறு, 641ஆவது படையணி-பதுக்குடியிருப்பு தெற்கு, 642ஆவது படையணி-ஒட்டுசுட்டான், 643ஆவது படையணி-முத்தையன்கட்டு, 681ஆவது படையணி- முள்ளிவாய்க்காள் மேற்கு, 682ஆவது படையணி - புதுக்குடியிருப்பு, 683ஆவது படையணி - உடையார்கட்டு ஆகிய படைத்தலைமையகங்களில் கையளிக்க முடியும்.

இதேவேளை எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் திகதி கறைத்துறைப்பற்று பிரதேச செயலகத்திலும், 4ஆம் திகதி ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திலும், 5ஆம் திகதி புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திலும் இது தொடர்பாக நேர்முகப் பரீட்சைகள் இடம்பெறும் எனவும் குறித்த துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .