2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

வவுனியா விபத்தில் ஆசிரியை பலி

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 24 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா, சாந்தசோலை சந்திக்கு அருகாமையில் இன்று திங்கட்கிழமை (24) மாலை 2.45 மணிக்கு இடம்பெற்ற விபத்தொன்றில் ஆசிரியையொருவர் உயிரிழந்துள்ளார்.

வவுனியாவில் இருந்து பளை நோக்கி சென்றுகொண்டிருந்த புகையிரதப் பணியில் ஈடுபடும் இந்திய நிறுவனத்திற்கு சொந்தமான டிப்பர் வாகனமே பாடசாலை விட்டு வீடு நோக்கி சென்று கொண்டிருந்த ஆசிரியையின் மோட்டார் சைக்கிளில் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்த ஆசிரியை வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வவுனியா புதிய சினக்குளம் அ.த.க பாடசாலையில் கல்விகற்பிக்கும் ஒரு வயது குழந்தையின் தாயான சுகன்யா அகிலன் (வயது 38) என்பவரே உயிரிழந்தார் என்று வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை அப்பகுதி மக்கள் விபத்து சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பொலிஸாருடன் முரண்பட்டுக்கொண்ட நிலையில் சம்பவ இடத்திற்கு கலவரத்தடுப்பு பொலிஸார் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

இதேவேளை சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வருகை தந்து வவுனியா பொலிஸாரிடம் சம்பவம் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .