2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

'விபத்தில் சிக்கியவர்களை உடன் வைத்தியசாலைக்கு கொண்டு வாருங்கள்'

Kogilavani   / 2014 மார்ச் 02 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

எவரேனும் விபத்தில் சிக்கினால் அருகிலிருப்பவர்கள் உடனடியாக அவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு வருமாறு வவுனியா பொது வைத்தியசாலையின் அத்தியட்சகர் வைத்தியகலாநிதி குலலிங்கம் அகிலேந்திரன் கேட்டுகொண்டுள்ளர்.

இது தொடர்பில் அவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளதாவது,

வவுனியாவில், அண்மையில் இடம்பெற்ற விபத்தொன்றில் ஆசிரியை ஒருவர் பலியானார். இவர், விபத்திற்குள் சி;க்கி பல மணித்தியாலங்களாக வீதியிலே கிடந்துள்ளார். இந்நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு வந்த பின்பு அவர் உயிரிழந்தார். இது ஒரு துர்ப்பாக்கியமான நிலைமயாகும்.

இன்று அவ் ஆசிரியையினுடைய குழந்தையின் எதிர்காலத்தையிட்டு கவலையடைய வேண்டியுள்ளது.

விபத்தில் சிக்கியவர்களை  அவ்விடத்திலேயே விட்டு சென்றால் அது சிலவேளைகளில் உயிரிழப்பாக போய்விடும். எனவே விபத்தில் சிக்கியவர்களை எவரேனும் கண்டால் அவர்களை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முயலவேண்டும். அதற்கு சாதகமான நிலை ஏற்படாத பட்சத்தில் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்கு அறிவித்தலை வழங்குங்கள்.

எனவே இவ்வாறான சம்பவங்களை இனி வரும் காலத்தில் இல்லாது செய்வதற்கு மக்கள் முன்வரவேண்டும்.

சிலர் சட்ட சிக்கல்களை எதிர்நோக்க வேண்டிவரும் என்பதனால் விபத்தில் சிக்கியவர்களை அவ்விடத்திலேயே விட்டு செல்கின்றனர். அதன் காரணமாக விபத்தில் சிக்கியவர்களை கொண்டு வரும் நபர்களுக்கு நாம் சட்ட சிக்கல்களை குறை;பபதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

எனவே இனி வரும் காலங்களில் அவர்களுக்கு சட்டசிக்கல் வராத வகையில் இருக்கும் என்பதனால் விபத்தில் சிக்கியவர்களை உடன் வைத்தியசாலைக்கு கொண்டு வாருங்கள்.

விபத்தில் சிக்கியவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு வர முடியாத சூழல் காணப்படுமாயின் வவுனியா பிரதேசமாயின் வவுனியா பொது வைத்தியசாலையுடன் தொடர்புகொள்ளுங்கள்' என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .