2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

நீதிமன்றத்திற்கு முன்னால் ஒலி எழுப்பியவருக்கு தண்டம்

Kogilavani   / 2014 மார்ச் 03 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி நீதிமன்றத்திற்கு முன்னால் ஒலி எழுப்பிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கு 1000 ரூபா தண்டம் விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் திங்கட்கிழமை (03) உத்தரவிட்டார்.

நீதிமன்ற நடவடிக்கைகள் திங்கட்கிழமை (03) நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, குறித்த நபர் மோட்டார் சைக்கிளின் ஒலியினை பலமாக எழுப்பியப்படி  சென்றுள்ளார்.

இதனையடுத்து குறித்த நபரினை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தும்படி நீதவான் கிளிநொச்சி பொலிஸாரிற்கு உத்தரவிட்டார்.

உடனடியாகப் பொலிஸார் குறித்த நபரினைக் கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போதே நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .