2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

வாள்வெட்டுக்கு இலக்காகி ஒருவர் படுகாயம்

Kogilavani   / 2014 மார்ச் 03 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.கரவெட்டி இராஜகிராமம் பகுதியில் நேற்று (02) இரவு இடம்பெற்ற வாள்வெட்டில் அதே இடத்தினைச் சேர்ந்த கே.தீபன் (26) என்பவர் படுகாயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் திங்கட்கிழமை (03) தெரிவித்தனர்.

குறித்த நபர் மீது வாள்வெட்டினை மேற்கொண்ட அவரது மைத்துனர் தலைமறைவாகியுள்ளதாகப் பொலிஸார் கூறினர்.

காசுப்பிரச்சினை காரணமாக தனது தங்கையின் கணவனையே மேற்படி நபர் வாளால் வெட்டியுள்ளதாகப் பொலிஸார் கூறினர்.
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார்  ; தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .