2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

முறிகண்டியில் வெடிப்பு; ஐவர் காயம்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 03 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, திருமுறிகண்டிப் பகுதியில் மர்மப்பொருளொன்று திங்கட்கிழமை (03) வெடித்ததில் படுகாயமடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்படி பகுதியைச் சேர்ந்த அழகர் இராமச்சந்திரன் (வயது 50), அழகர் இராமநாதன் (வயது 52), இராமச்சந்திரன் அல்லிநாயகி (வயது 44), தங்கப்பாண்டி மோகனகாந்தி, ஜெயராமன் கிருஷ்ணவேணி ஆகியோரே  இதில் படுகாயமடைந்தனர். 

உடனடியாக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவர்களில் இராமச்சந்திரன் அல்லிநாயகி என்பவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக மாங்குள பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .