2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கம் அங்குரார்ப்பணம்

A.P.Mathan   / 2014 மார்ச் 03 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கம் நேற்று (2) வவுனியாவில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

வவுனியா இந்திரன்ஸ் கோட்டலில் இடம்பெற்ற இந் நிகழ்வில் புதிய நிர்வாகிகள் தேர்வும் இடம்பெற்றதுடன் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டிருந்தது.

இதன் நிமிர்த்தம் தலைவராக பொன்னையா மாணிக்கவாசகமும் செயலாளராக நவரத்தினம் கபில்நாத்தும் பொருளாளராக சிவபாதம் கஜேந்திரகுமாரும் தெரிவு செய்யப்பட்டதுடன் உப தலைவராக ஆறுமுகம் சுபாஸ்கரன், உப செயலாளராக கிருஸ்ணகோபால் வசந்தரூபனும் நிர்வாக உறுப்பினர்களாக சுப்பிரமணியம் வரதகுமார், தெய்வேந்திரம் புரட்சிதாசன், பரராசசிங்கம் ரோன் கனிசியஸ், கோபாலகிருஸ்ணன் ரூபகாந், எஸ்.சிவபாதசுந்தரம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதுடன் இலங்கை தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் வவுனியா இணைப்பாளராக ஆறுமுகம் சுபாஸ்கரனும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .