2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

வற்றாப்பளை முருகன் கோயிலில் கொள்ளை

A.P.Mathan   / 2014 மார்ச் 05 , மு.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஆர்.ரஸ்மின்
 
முல்லைத்தீவு, முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட வற்றாப்பளை ஸ்ரீ முருகன் கோயிலில் நேற்று முன்தினம் (03) நள்ளிரவு வேளை இனந்தெரியாதோரினால் பெறுமதிவாய்ந்த பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக முள்ளியவளை பொலிஸார் தெரிவித்தனர்.
 
குறித்த கோயிலின் கூரையை பிரித்துக் கொண்டு உள்ளே சென்ற கொள்ளையர்கள், கோயிலின் மூலஸ்தானக் கதவுக்கு தீமூட்டியுள்ளதுடன், ஜெந்திர தகடு, ஒலிபெருக்கி சாதனம், சீ.டி பிளேயர் உள்ளிட்ட ஒரு இலட்சத்துக்கும் அதிகமான பொருட்களை எடுத்து சென்றுள்ளதாக அந்த கோயிலின் பிரதம குருக்கள் பொலிஸில் செய்த முறைப்பாடடில் தெரிவித்துள்ளார்.
 
இச்சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .