2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கிண்ணியா நீதிமன்றத்தை மீள ஆரம்பிக்கமாறு கோரிக்கை

Kogilavani   / 2014 மார்ச் 05 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.பரீத்

கிண்ணியாவில் மூடப்பட்ட கிண்ணியா சுற்றுலா நீதிமன்றத்தை உடன் மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் ஹக்கீமுக்கு அனுப்பிய கடிதத்திலேயே அவர் இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'கிண்ணியாவில் இயங்கி வந்த சுற்றுலா நீதிமன்றம் கடந்தகால பயங்கரவாதச் சூழ்நிலை காரணமாக 1987 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தற்காலிகமாக மூடப்பட்டது.

பயங்கரவாதம் முடிவுறுத்தப்பட்டு சுமார் நான்கு வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் இந்த நீதிமன்றம் இதுவரை மீள ஆரம்பிக்கப்படவில்லை. 

இந்த நீதிமன்றத்தை மீள ஆரம்பிக்க கடந்த காலங்களில் தாங்கள் சில முன்னெடுப்புகளை எடுத்துவந்த போதிலும் அதை நிறைவுறுத்த முடியாத சூழ்நிலை உருவாக்கப்பட்டதாக அறிந்து மிகவும் கவலையடைகிறேன்.

கிண்ணியா நீதிமன்றம் இயங்காத காரணத்தினால் இப்பகுதி வழக்குகள் திருகோணமலை மற்றும் கந்தளாய் நீதிமன்றங்களில் விசாரிக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் ஏராளமான பிரச்சினைகளை அனுபவித்து வருகின்றனர். குறிப்பாக முஸ்லிம் பெண்கள் பல்வேறு அலைச்சல்களுக்கு உட்பட்டு வருகின்றனர்.

இந்தப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண நீதி அமைச்சு தங்களது நிர்வாகத்தின் கீழ் இருக்கும் காலத்திற்குள் கிண்ணியா நீதிமன்றம் மீள ஆரம்பிக்கப்பட வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம்.

எனவே, நிரந்தர கட்டட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும் அதேவேளை தற்காலிக கட்டடம் ஒன்றில் கிண்ணியா நீதிமன்றத்தை உடன் மீள இயங்கச் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .