2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

உளநல குடும்ப சுகாதார வேலைத்திட்டம்

Menaka Mookandi   / 2014 மார்ச் 05 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்


கிளிநொச்சி  மாவட்ட குடும்ப புனர்வாழ்வு நிலையத்தினால் கரைச்சி, கண்டாவளை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் உளநல, குடும்ப சுகாதார வேலைத்திட்டங்களை மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் செவ்வாய்க்கிழதை (04) மாலை உதயநகரிலுள்ள சோலைவனம் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட குடும்ப புனர்வாழ்வு நிலையத்தின் வடமாகாண இணைப்பாளர் கே.பிரேம்குமார் கூறுகையில்,

கரைச்சி பிரதேச செயலர் பிரிவிலுள்ள அம்பாள்நகர், கோணாவில் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளிலும், கண்டாவளை பிரதேச செயலர் பிரிவிலுள்ள பரந்தன்நகர், கோரக்கன்கட்டு, புன்னைநீராவி ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளிலும் இத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது என்றார்.

மேற்படி கிராமங்களில் இத்திட்டத்தின் நடைமுறைக்கென தெரிவு செய்யப்பட்ட தொண்டர்களுடனே கலந்துரையாடல் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் மக்களின் உடல், உள சுகாதாரத்தை மேம்படுத்தும் முகமாக குடும்ப புனர்வாழ்வு நிலையங்களின் ஊடாக இச்செயற்றிட்டம் மேற்கொள்ளப்படுமென பிரேம்குமார் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .