2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ஏ.ரி.எம். அட்டையை திருடியவர் கைது

Suganthini Ratnam   / 2014 மார்ச் 06 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அடம்பன் நீர்ப்பாசனத் திணைக்களத்தில் கடமையாற்றுகின்ற  தொழில்நுட்பவியலாளர் ஒருவரின் தன்னியக்க பணப்பரிமாற்று அட்டையை திருடி, அவரது கணக்கிலிருந்து  35,000  ரூபாவை எடுத்ததாகக் கூறப்படும்  அதே திணைக்களத்தின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஒருவரை செவ்வாய்க்கிழமை (04) கைதுசெய்ததாக விடத்தல்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி.ஜே.குணதிலக்க தெரிவித்தார்.

தனது தன்னியக்க பணப்பரிமாற்று அட்டை திருடப்பட்டு   கணக்கிலிருந்து 02 தடவைகள் 35,000 ரூபா எடுக்கப்பட்டதென்று  மேற்படி தொழில்நுட்;பவியலாளர் கடந்த 3ஆம் திகதி  முறைப்பாடு செய்ததாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில், இது  தொடர்பில் மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு பொலிஸார் கொண்டுவந்ததைத் தொடர்ந்து  நீதிமன்ற உத்தரவுக்கமைய இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு தெரியப்படுத்தப்பட்டது.

மேற்படி தொழில்நுட்பவியலாளரின் பணம் எடுக்கப்பட்ட தினத்தில்  தன்னியக்க பணப்பரிமாற்று இயந்திரத்தில் பொருத்தப்பட்ட பாதுகாப்புக் கமராவில் பதியப்பட்ட புகைப்படங்களுக்கமைய சந்தேக நபரை கைதுசெய்ததாகவும் அவர் கூறினார்.

பணத்தை எடுத்ததுடன்,  திருடப்பட்ட தன்னியக்க பணப்பரிமாற்று அட்டையை உடைத்து   மலசலகூடக் குழியினுள் சந்தேக நபர்  போட்;டதாகவும் அவரிடம் மேற்கொண்ட விசாரணையிலிருந்து தெரியவருவதாகவும் அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .