2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

அழகுசாதன பொருள் விற்பனை நிலைய உரிமையாளரை தாக்கியவர் கைது

Suganthini Ratnam   / 2014 மார்ச் 07 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ரஸ்மின்

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணீரூற்று பிரதேசத்திலுள்ள அழகுசாதன பொருட்கள் விற்பனை நிலையமொன்றின் உரிமையாளரை தாக்கியதாகக் கூறப்படும் அப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை வியாழக்கிழமை (06)  கைதுசெய்ததாக முள்ளியவளை பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையத்தில் பணியாற்றும் இவ்விளைஞர்  மதுபோதையில்  தாக்குதலுக்குள்ளானவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கியதுடன், அழகுசாதன பொருட்கள் விற்பனை நிலையத்திலுள்ள பொருட்களையும் சேதப்படுத்தியதாகவும் பொலிஸார் கூறினர்.

தாக்குதலுக்குள்ளானவர் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

சந்தேக நபரிடம் பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .