2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

பிரதேசத்திற்கு மின்சாரம் வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்

Kanagaraj   / 2014 மார்ச் 08 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ரஸ்மின்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கறைத்துறைப்பற்று பிரதேச சபைக்குட்ட முறிப்பு-குமுழமுனை பிரதேசத்திற்கு மின்சாரம் வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் முல்லைத்தீவு கிளை அலுவலகத்தின் கடமை நேர அதிகாரியொருவர் தெரிவித்தார்.

வடக்கின் வசந்தம் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் குறித்த பிரதேசத்திற்கு மின்சாரம் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். அத்துடன் குமாரபுரம், புதன்வயல் சந்தி ஊடாக முறிப்பு, பால்பண்னை, குமுழமுனை ஆகிய பிரதேசங்களுக்கு அதிஉயர் மின்சாரம் கொண்டு செல்லும் வேலைத்திட்டத்தை வடக்கின் வசந்தம் அபிவிருத்தி திட்டத்தின் வவுனியா அலுவலகம் தற்போது ஆரம்பித்துள்ளது.

அவர்கள் குறித்த பணியை நிறைவு செய்ததும், வீடுகளுக்கு மினாசாரத்தினை வழங்கும் நடவடிக்கையை இலங்கை மின்சார சபையின் முல்லைத்தீவு அலுவலகம் மேற்கொள்ளும் எனவும் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கறைத்துறைப்பற்று பிரதேச சபைக்குற்பட்ட பால்பண்ணை, முறிப்பு, குமுழமுனை ஆகிய பிரதேசங்களுக்கு சுமார் 50 இற்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு பின்னர் மின்சாரம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .