2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

பார்த்தீனியம் அகற்றும் பணி

Kanagaraj   / 2014 மார்ச் 08 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


நவரத்தினம் கபில்நாத்

வவுனியா பொலிஸாரும் பாடசாலை மாணவர்களும் இணைந்து இன்று (8.3) வவுனியாவில் பார்த்தீனியத்தை (களை) அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திற்கு முன்னாள் இடம்பெற்ற இந் நிகழ்வில் வவுனியா பொலிஸார், முற்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினர், பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டு வவுனியா நகர்ப்பகுதி எங்கும் பாத்தீனியத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

முழு நாள் வேலைத்திட்டமாக இடம்பெற்ற இப் பணியில் பார்த்தீனியத்தினால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான விழிப்புணர்வு பிரசுரங்களையும் மக்களுக்கு வழங்கியிருந்தனர்.

இதேவேளை வட மாகாண விவசாய அமைச்சினால் பார்த்தீனியம் களை அகற்றும் நிகழ்ச்சி திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .