2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

முள்ளியவளை பிரதேச வர்த்தகர்களின் பிரச்சினைகளை கேட்டறியும் கூட்டம்

Kogilavani   / 2014 மார்ச் 09 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஆர்.ரஸ்மின்


முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பிரதேச வர்த்தகர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொள்ளும் விசேட கலந்துரையாடலொன்று ஞாயிற்றுக்கிழமை(9) காலை முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூpயின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

முள்ளியவளை வர்த்தக சங்கத்தின் தலைவர் பரராஜசிங்கம் சுஜந்தன் தலமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்டத்தின் இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் அபயசேகர, கேணல் செனவிரத்ன, கேணல் மகநாயக்க, லெப்ரினல் ஜெனரல் ஜெகத் பிரேமதிலக உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது முள்ளியவளை பிரதேச வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து வருகை தந்த இராணுவ கட்டளைத் தளபதியிடம் தெரிவிக்கப்பட்டது.

வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இராணுவனத்தினரால் நிவர்த்தி செய்யக்கூடியவற்றை உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்து விரைவில் தீர்வை பெற்றுக் கொடுப்பதுடன், வர்த்தகர்களும், பொதுமக்களும் எதிர்நோக்கும் ஏனைய பிரச்சினைகளை இலங்கை பொலிஸ் திணைக்களம் உள்ளிட்ட அமைச்சுக்கள் அந்தந்தத் திணைக்களங்களினூடாக நிவர்த்தி செய்யவும் நடவடிக்கை எடுப்பதாகவும் முல்லைத்தீவு மாவட்டத்தின் இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் அபயசேகர இதன்போது குறிப்பிட்டார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .