2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மன்னார் பிரதேச மத்தியஸ்த சபை சனிக்கிழமைகளில் கூடும்

Kogilavani   / 2014 மார்ச் 11 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் பிரதேச மத்தியஸ்த சபை எதிர்வரும 15 ஆம் திகதி முதல் சனிக்கிழமைகளில் கூடும் என மத்தியஸ்த சபைத் தவிசாளர் எஸ்.பிரின்ஸ்டயஸ் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் ஒவ்வொரு ஞாயிறு தினங்களிலும் கூடிய மத்தியஸ்த சபை இனி வருங்காலங்களில் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் கூடவுள்ளதால் முறைப்பாட்டாளர்கள், விசாரணையாளர்கள் அன்றைய தினம் சமூகம் அளிக்கும்படி கோரப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் 15ஆம் திகதி சனிக்கிழமை மட்டும் மன்னார் மூர்வீதியில் அமைந்துள்ள அல்-அஸ்ஹார் தேசிய பாடசாலையில் அமர்வுகள் இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .