2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மாற்றுத் திறனாளிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கல்

Kogilavani   / 2014 மார்ச் 12 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.தபேந்திரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில், வாகனம் செலுத்தக்கூடிய மாற்றுத் திறனாளிகளுக்கான சாரதி அனுமதிபத்திரம் வழங்குவதற்கான மருத்துவ பரிசோதனை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (14) மற்றும் சனிக்கிழமை (15) ஆகிய தினங்களில் கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் செவ்வாய்க்கிழமை (12) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

'ஒட்டிச்சுட்டான், மாந்தை கிழக்கு, துணுக்காய் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு 14 ஆம் திகதியும், கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, வெலிஓயா ஆகிய பிரதேச செயலக பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு 15 ஆம் திகதியும் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

மருத்துவச் சான்றிதழ் பெற்றுக்கொள்ள வருபவர்கள், தமது குடும்ப அட்டை, அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழின் பிரதி, மருத்துவ பரிசோதனைக் கட்டணம் 600 ரூபா ஆகியவற்றுடன் சமூகமளிக்க வேண்டும்.

தகுதியானவர்கள், எந்தெந்த வகையான வாகனங்களை செலுத்தவுள்ளார்களோ அவ்வாகனங்களுக்கு அவசியமான மாற்றங்களைச் செய்து தகுதி பார்க்கும் பரிசோதனையில் பங்கேற்க வேண்டுமென மோட்டார் போக்குவரத்து பரீட்சகர்களால் இதன்போது அறிவுரைகள் கூறப்பட்டு,  அதன் பின்னர் தகுதியானவர்களுக்கு மட்டும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

இந்த மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதற்காக கொழும்பு மோட்டார் போக்குவரத்து திணைக்கள பரிசோதகர்கள்;, நுகேகொடயிலுள்ள சாரதி அனுமதிப் பத்திரத்திற்காக மருத்துவ சான்றிதழ் வழங்கும் மருத்துவ அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளனர்' என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .