2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மன்னாரில் பெருகியுள்ள கொக்குகள்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 12 , பி.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் நகரில் அதிகரித்துள்ள நூற்றுக்கணக்கான  வெள்ளைக் கொக்குகள் மாவட்டச்  செயலக வளாகத்திலுள்ள மரங்களில் தங்கியிருப்பதுடன், மாவட்டச்  செயலக கட்டிடங்கள் மற்றும்  வீதியில் எச்சம் இட்டு   அசுத்தப்படுத்துவதாக மன்னார் நகரசபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் தெரிவித்தார்.

இதனால்  இங்கு துர்நாற்றம் வீசுவதுடன்,  சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.

கடந்த 30 வருடகால யுத்தம் காரணமாக காடுகளிலும் ஓடைகளை அண்டிய பகுதிகளிலும் சதுப்பு நிலங்களிலும் வாழ்ந்துவந்த மேற்படி வெள்ளைக் கொக்குகள், இடம்பெயர்ந்து  மன்னார்  மாவட்டத்திற்கு  அடைக்கலம் தேடி வந்த நிலையில்   தற்போது இவை  பல்கிப்பெருகியுள்ளன.

மேற்படி கொக்குகள் மன்னார் மாவட்டச் செயலக வளாத்திலுள்ள மரங்கள், சிறிய குளங்கள் மற்றும் ஓடைகளை அண்டிய பகுதிகள் ஆகியவற்றில் வாழ்ந்துவருவதாகவும் அவர் கூறினார்.

மேலும், இது தொடர்பில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரியவின்   கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாகவும் அவர்  அனுமதியளித்தால் மாவட்டச் செயலக வளாகத்திலுள்ள  மரங்களை வெட்டி கொக்குகளை வெளியேற்ற முடியுமெனவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .