2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

வெளிமாவட்ட வியாபாரிகளை கட்டுப்படுத்துமாறு கோரிக்கை

Menaka Mookandi   / 2014 மார்ச் 13 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ரஸ்மின்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கறைத்துறைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தந்து வியாபாரத்தை மேற்கொள்ளும் வியாபாரிகளின் வருகையை கட்டுப்படுத்துமாறு உயரதிகாரிகளிடம் கோரிக்கையொன்றை விடுத்துள்ளதாக முள்ளியவளை வர்த்தக சங்கத்தின் தலைவர் ப.சுஜந்தன் தமிழ்மிரருக்குத் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி, பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கு இது தொடர்பாக தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 'வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் யாருடைய அனுமதியையும் பெற்றுக்கொள்ளாது தமது விருப்பத்திற்கேற்றவாறு முல்லைத்தீவு கறைத்துறைப்பற்று பிரதேச சபை எல்லைக்குற்பட்ட பிரதேசங்களில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தாம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக வர்த்தகர்கள் எம்மிடம் முறையிட்டுள்ளார்.

எனவே முல்லைத்தீவு கறைத்துறைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் வியாபாரத்திற்காக வருகை தரும் வெளி மாவட்ட வியாபாரிகள் இங்கு வரும்போது வர்த்தக சங்கத்தின் அனுமதியைப் பெற்றே தமது வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அந்த அதிகாரிகளிடம் கேட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .