2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

தொற்றா நோய்களுக்கான மருத்துவ பரிசோதனை

Kogilavani   / 2014 மார்ச் 14 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஆர்.ரஸ்மின்


தேசிய சுகாதார வாரத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் கறைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட கணுக்கேணி பிரதேசத்தில் சிறுநீரக மற்றும் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வும், தொற்றா நோய்களுக்கான மருத்துவ பரிசோதனையும் வியாழக்கிழமை (13)ஆம் கணுக்கேணி பாலர் பாடசாலையில் நடைபெற்றது.

கறைத்துறைப்பற்று ஆழுர் டொக்டர் அ.தயாலசீலன் தலமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மேற்பார்வை பொதுசுகாதார பரிசோதகர் ரி.தவாராசா தண்ணீரூற்று பொதுசுகாதார பரிசோதகர் எஸ்.சி.எம்.ஜெஸ்லி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது சிறுநீரக மற்றும் புற்றுநோய் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன், தொற்றா நோய்களுக்கான மருத்துவ பரிசோதனையும் இடம்பெற்றது. இந்த மருத்துவ பரிசோதனையில் 35 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .