2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

சடலத்தை அடையாளம் காட்டுமாறு கோரிக்கை

Kanagaraj   / 2014 ஏப்ரல் 09 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் புகையிரத பாதைக்கு அருகிலிருந்து மீட்கப்பட்ட ஆணின் சடலத்தை அடையாளம் காட்டுவதற்கு உதவுமாறு  கிளிநொச்சி வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி எம்.கார்த்திகேயன் புதன்கிழமை (09) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

28 வயது மதிக்கத்தக்க மேற்படி ஆணின் சடலம் மார்ச் மாதம் 13 ஆம் திகதி மீட்கப்பட்டு, கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் பிரேத அறையில்; வைக்கப்பட்டுள்ளது.

மேற்படி சடலத்தினை ஒருமாதம் கடந்த நிலையிலும் எவரும் அடையாளங் காட்ட முன்வராத நிலையில் தொடர்ந்து அச்சடலம் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக  சட்ட வைத்தியதிகாரி மேலும் தெரிவித்தார்.

இச்சடலத்திற்கு உரியவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது இவர் தற்கொலை செய்துகொண்டாரா? என்பது தொடர்பில்  விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .