2025 ஜூலை 21, திங்கட்கிழமை

ஆயர்களை அரசியலுடன் தொடர்புபடுத்த வேண்டாம்: செல்வம் எம்.பி

Kogilavani   / 2014 ஏப்ரல் 28 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

'எமது ஆயர்கள் அரசியல் செய்யவில்லை. அவர்கள் எமது அரசியலுக்கு பொதுவான கருத்துக்களை முன்வைப்பதோடு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வைப்பெற்றுக்கொடுக்க மேற்கொள்ள வேண்டிய சகல பிரச்சினைகளையுமே முன் வைக்கின்றனர். இந்த நிலையில் அவரை அரசியல் ரீதியாக தொடர்பு படுத்தி பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது' என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

ஆயர்கள்  தொடர்பாக பொது பல சேனா அமைப்பு தொடர்ந்தும் வெளியிட்டு வரும் கருத்துக்களை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களுக்கு எதிரான கருத்துக்களை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் திங்கட்கிழமை (28) விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'மன்னார் மற்றும் யாழ்.மறைமாவட்ட ஆயர்கள் தமிழ் மக்களுக்காக தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக மக்களின் மீள் குடியேற்றத்தில் உள்ள பிரச்சினைகள், இந்திய வீட்டுத்திட்டம், அரசியல் கைதிகளின் விடுதலை, காணமால் போனவர்களை கண்டு பிடித்தல் போன்ற மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலேயே அவர்கள் செயற்பட்டு வருகின்றனர்.

இந்த பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உரிய தீர்வை பெற்றுக்கொடுக்காத நிலையிலே அவர்கள் இப்பிரச்சினைகளை சர்வதேசம் வரை கொண்டு சென்றுள்ளனர்.

காரணாம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும் என்பதேயாகும்.

இறுதியாக மன்னார், யாழ்.மறைமாவட்ட ஆயர்கள் இருவரும் தேசத்துரோக குற்றங்களை புரிந்திருப்பதாகவும் அவர்கள் இருவரையும் கைதுசெய்ய வேண்டும் என அந்த பொது பல சேனா அமைப்பு பொலிஸாரிடம்; முறைப்பாடு செய்துள்ளனர்.

இவர்களுடைய இந்த செயற்பாடுகளை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. பொதுபல சேனா அமைப்பின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் காணப்படுகின்றது.

எமது ஆயர்கள் அரசியல் செய்யவில்லை. அவர்கள் எமது அரசியலுக்கு பொதுவான கருத்துக்களை முன்வைப்பதோடு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வைப்பெற்றுக்கொடுக்க மேற்கொள்ள வேண்டிய சகல பிரச்சினைகளையுமே முன் வைக்கின்றனர்.
இந்த நிலையில் அவரை அரசியல் ரீதியாக தொடர்பு படுத்தி பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே பொது பல சேனா என்ற இந்த இனவாத அமைப்பு பௌத்த மத கோட்பாடுகளை மீறி செயற்படுகின்றது. புத்த தர்மத்திற்கு எதிராக செயற்டுகின்றது.

அரசாங்கத்தினால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள காடையர் குழுவாகவே இந்த மக்கள் பொதுபல சேனா அமைப்பை பார்க்கின்றனர்.

தமிழ் மக்களுக்காக தொடர்ந்தும் குரல் கொடுத்து வரும் எமது ஆயர்கள் தொடர்பாக பொது பல சேனா அமைப்பு வெளியிட்டு வரும் கருத்துக்களை தமிழ் தேசியக்கூட்டமைப்பு வன்மையாக கண்டிப்பதோடு எதிர்வரும் காலங்களில் அவர்கள் இவ்வாறான கருத்துக்களை வெளியிடும்போது சற்று சிந்தித்து செயற்பட வேண்டும்' என அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X