2025 ஜூலை 21, திங்கட்கிழமை

தேநீரில் பல்லி: ஒருவர் வைத்தியசாலையில்

Kogilavani   / 2014 ஏப்ரல் 29 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள சிற்றூண்டிச்சாலையொன்றில் தேநீர் அருந்தியவர்;களில் ஒருவருக்கு திடீர் சுகாவீனம் ஏற்பட்ட நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் திங்கட்கிழமை(28) அனுமதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

மன்னார் நீதிமன்றத்தில்வழக்கு விசாரணைக்காக வந்தவர்களில் 5 பேர் நீதிமன்றத்தில் அமைந்துள்ள சிற்றூண்டிச்சாலையில் தேனீர் அருந்திதியுள்ளனர்.

இதன்போது ஐந்து பேரில் ஒருவருடைய தோனீர் கோப்பையில் இறந்த நிலையில் முழுமையான பல்லி ஒன்று தென்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த நபர் சுகவீனம் அடைந்த நிலையில் உடனடியாக குறித்த மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

ஏனைய நான்கு பேரூம் வழக்கு விசாரனையின் காரணமாக உடனடியாக நீதிமன்றத்தில் இருந்து வைத்தியசாலைககுச் செல்லவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

பின் வழக்கு விசாரனைகளின் பின் ஏனைய 4 பேரூம் மன்னார் வைத்தியசாலைககுச் சென்று சிகிச்சை பெற்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X