2025 ஜூலை 21, திங்கட்கிழமை

யாழ். தனியார் பேரூந்து தரிப்பிடத்தில் மன்னார் பேரூந்துகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை

Suganthini Ratnam   / 2014 மே 01 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னாரிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சேவையில் ஈடுபட்ட தனியார் பேரூந்துகளுக்கு யாழ். தனியார் பேரூந்து தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டு சேவையில் ஈடுபடுவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என மன்னார் தனியார் போக்குவரத்துச் சங்கத்தின் தலைவர் ரி.ரமேஸ் தெரிவித்தார்.

மன்னாரின் தனியார் போக்குவரத்துச் சேவைக்கான உள்ளூர்; மற்றும் வெளிமாவட்டச் சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், புதன்கிழமை (30) அதிகாலை 5 மணியிலிருந்து  நண்பகல்; 12 மணிவரை மன்னாரிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான பேரூந்துகள் சேவையில் ஈடுபட்டன.

ஆனால், மேற்படி பேரூந்துகளுக்கு யாழ். தனியார் பேரூந்து தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டு, பயணிகளை ஏற்றி மீண்டும் மன்னாருக்கு வருவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.

மாறாக, யாழ். தனியார் போக்குவரத்து சங்கத்திற்குச் சொந்தமான பேரூந்துகள் யாழ்ப்பாணத்திலிருந்து முழங்காவில்வரை தமது சேவைகளை மேற்கொள்கின்றன. இதனால், பயணிகள் முழங்காவிலிலிருந்து பிறிதொரு பேரூந்தில்  மன்னாருக்கு பயணிக்க  வேண்டியுள்ளது.

இந்த நிலையில், பயணிகள்  பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X