2025 ஜூலை 21, திங்கட்கிழமை

இயக்கச்சியில் கொள்ளையர்கள் கைவரிசை

Kanagaraj   / 2014 மே 02 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

கிளிநொச்சி இயக்கச்சி ஊர்வணிகன்பற்றுப் பகுதியிலுள்ள ஒரு வீட்டின் ஜன்னல் வழியாக நேற்று (01) இரவு நுழைந்து அங்கிருந்த 10 இலட்சம் ரூபா பெறுமதியான 20 ½ பவுண் நகைகள் மற்றும் 18 ஆயிரம் ரூபா பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பளை பொலிஸார் இன்று (02) தெரிவித்தனர்.

வீட்டிலிருந்தவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது திருடர்கள் ஜன்னல் கம்பிகளை வளைத்து உள்நுழைந்து இந்தக் கொள்ளை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்
.
அத்துடன், அப்பகுதியிலுள்ள மேலும் ஒரு வீட்டினுள் நுழைந்த திருடர்கள், வீட்டிலிருந்த பொருட்களை தேடிய போதும், அங்கு எந்தப் பொருட்களும் திருடப்படவில்லையெனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளினை முன்னெடுத்து வருவதாகப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .