2025 ஜூலை 21, திங்கட்கிழமை

சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

Kanagaraj   / 2014 மே 04 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் இந்து முதியோர் நற்பணி மன்றத்தினால் நடாத்தப்பட்டு வரும் 5 ஆம் கட்ட கணினி பயிற்சி நெறியை பூர்த்தி செய்த 20 மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்  வழங்கும் நிகழ்வு மன்னார் கீரி அறநெறி மண்டபத்தில் இன்று(04) ஞாயிற்றுக்கிழமை காலை இடம் பெற்றது.

நற்பணி மன்றத்தின் தலைவர் பவமொழி பவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம்  கலந்துகொண்டதுடன் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட செயலக கணக்காளர் ஜே.ஜெபனேசன் மற்றும் தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ செயலாளர் நாயகம் ஏ.ஹென்றி மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.

இதன்போது மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .