2025 ஜூலை 21, திங்கட்கிழமை

துஷ்பிரயோக குற்றச்சாட்டில் சாரதி கைது

Suganthini Ratnam   / 2014 மே 06 , மு.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

மாற்றுத்திறனாளிப் பெண்ணொருவரை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் 53 வயதான சாரதியொருவரை ஞாயிற்றுக்கிழமை (4) கைதுசெய்ததாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

மாற்றுத்திறனாளிகள்  பணியாற்றும் நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனத்தில் கிராமங்களிலிருந்து மாற்றுத்திறனாளிகள் நிகழ்வொன்றுக்காக அழைத்து வரப்பட்டனர்.

பின்னர், இவர்களை வீடுகளில் விடுவதற்காக வாகனத்தில் கொண்டுசென்ற இச்சாரதி,  ஏனைய பிள்ளைகளை வீடுகளில் இறக்கிவிட்டுள்ளாக்ர்.

இதன்போது, இப்பெண்ணை வீட்டில் விடுவதற்காக கொண்டுசென்றபோது வாகனத்தில் வைத்து துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இந்நிலையில்,  பிரதேசவாசிகள் உடன் செயற்பட்டு சந்தேக  நபரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகவும் பொலிஸார் கூறினர்.

வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இச்சந்தேக நபர்,  14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .