2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கிளிநொச்சி மாவட்டத்தில் உதவிக் கொடுப்பனவுகள்

Suganthini Ratnam   / 2014 மே 07 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் சமூக சேவைகள் திணைக்களத்தால் 7,786 பேருக்கு மாதாந்த உதவித் தொகை வழங்கப்பட்டு வருவதாக கிளிநொச்சி மாவட்டச் செயலக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், புற்றுநோயால் பீடிக்கப்பட்ட 157 பேருக்கும் காசநோயால் பீடிக்கப்பட்ட 17 பேருக்கும் சிறுநீரக நோயால் பீடிக்கப்பட்ட 09 பேருக்கும் தொழுநோயால் பீடிக்கப்பட்ட 02 பேருக்கும் உதவிக் கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன.

2010ஆம் ஆண்டிலிருந்து மாதாந்த உதவித்தொகையானது தலா 250 ரூபாவிலிருந்து 500 ரூபாவரை  வழங்கப்படுகின்றது.

2011ஆம் ஆண்டிலிருந்து புற்றுநோய் கொடுப்பனவாக தலா 500 ரூபாவிலிருந்து  750 ரூபாவரையும்  காசநோய், தொழுநோய்,  சிறுநீரக நோய்களுக்கான கொடுப்பனவுகளாக தலா  300 ரூபா மாதாந்தம் வழங்கப்படுகின்றன. 

இவை தவிர, மஹிந்த சிந்தனையின் கீழ் 2792 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்தக் கொடுப்பனவு வழங்கப்படுகின்றன. இந்நிலையில், மாற்றுத்திறனாளி ஒருவருக்கு மாதாந்தம்  3,000 ரூபா படி இக்கொடுப்பனவு வழங்கப்படுகின்றது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .