2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கட்டிடப்பொருள் விற்பனையகத்தில் திருட்டு

Suganthini Ratnam   / 2014 மே 08 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன் 

முல்லைத்தீவு, றெட்பானா எனும் இடத்திலுள்ள கட்டிடப் பொருள்  விற்பனை நிலையமொன்றிலிருந்து 100,000 ரூபா  பெறுமதியான பொருட்கள்  திருடப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்புப் பொலிஸில் குறித்த விற்பனை நிலைய  உரிமையாளர் முறைப்பாடு செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

புதன்கிழமை (07)  மாலை   இந்த விற்பனை நிலையத்தை பூட்டிவிட்டு தான் சென்ற நிலையில்,  வியாழக்கிழமை  (08) காலை  திறப்பதற்கு  வந்தபோது விற்பனை நிலையத்தின் கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இந்தத் திருட்டு  தொடர்பில் விரிவான விசாரணைகளை புதுக்குடியிருப்புப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .