2025 ஜூலை 21, திங்கட்கிழமை

பிரதேச செயலகத்தின் நடமாடும் சேவை

Menaka Mookandi   / 2014 ஜூலை 15 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட செயலகம் மற்றும் கரைச்சி பிரதேச செயலகம் ஆகியன இணைந்து நடமாடும் சேவைகளினை பிரதேச செயலக வளாகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (15) நடத்தப்பட்டன. 

இந்த நடமாடும் சேவையில், பிறப்பு சான்றிதழ் தொடர்பான பிறப்பு பதிவு, காலங்கடந்த பிறப்பு பதிவு, இலங்கைக்கு வெளியில் நிகழ்ந்த பிறப்பு, பிறப்பு சான்றிதழ்களின் பிரதி எடுத்தல் போன்ற சேவைகளும், இறப்பு சான்றிதழ் தொடர்பான இறப்பு பதிவு, காலங்கடந்த இறப்பு பதிவு, இலங்கைக்கு வெளியில் நிகழ்ந்ததான இறப்பு பதிவு, இறப்பு சான்றிதழின் பிரதி எடுத்தல் ஆகிய சேவைகளும் வழங்கப்பட்டன.

மேலும், தேசிய அடையாள அட்டை புதிதாக எடுத்தல், திருத்தம் செய்தல், புதுப்பித்தல், முதியோர் அடையாள அட்டை பெற்றுக்கொள்ளல் போன்ற சேவைகளும் வழங்கப்பட்டன. 

தொலைந்த ஆவணங்களுக்கான பொலிஸ் அறிக்கைகள், இலவச ஆயுர்வேத சிகிச்சை, இலவச சட்ட ஆலோசனைகள், வேலைவாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளுக்கான சேவைகள், தொழில் வழிகாட்டல்கள் என்பனவும் வழங்கப்பட்டன.

இந்தச் சேவையில் பங்குபெறுவோருக்கு புகைப்படம் எடுத்தல், தபால் செலவுகள் யாவும் தேசிய மொழிகள் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X