2025 ஜூலை 21, திங்கட்கிழமை

விஷேட தேவையுடையவர்களுக்கு நிதி ஒதுக்கீடு

Menaka Mookandi   / 2014 ஜூலை 16 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கறைத்துறைப்பற்று பிரதேச செயலகத்திற்குற்பட்ட பகுதிகளில் வாழ்கின்ற விஷேட தேவையுடையவர்களுக்கு, மலசல கூடங்களை பெற்றுக்கொடுப்பதற்காக கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிசாத் பதியுதீன் 10 இலட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.

முல்லைத்தீவுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (15) விஜயம் செய்த அமைச்சர் ரிசாத் பதியுதீனிடம், கறைத்துறைப்பற்று விஷேட தேவையுடையவர்களின் சங்கத்தினர் பல கோரிக்கைகளை முன்வைத்தனர்.

அவர்களது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட அமைச்சர், விஷேட தேவையுடையவர்கள் பத்து பேருக்கு  மலசல கூடங்களை பெற்றுக்கொடுப்பதற்காக தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் 10 இலட்சம் ரூபாவை ஒதுக்கீடு செய்து தருவதாகக் கூறினார்.

அத்துடன், பாடசாலைகளுக்கு செல்கின்ற விஷேட தேவையுடையவர்களின் கல்வி நடவடிக்கைகள் உள்ளிட்ட ஏனைய தேவைகள் அனைத்தும்; எதிர்காலங்களில் அரசாங்கம் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களினது உதவியைப் பெற்று பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும்  அமைச்சர் உறுதியளித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X