2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கறைத்துறைப்பற்றில் குடிநீர் வசதியை பெற்றுத்தருமாறு மக்கள் கோரிக்கை

Menaka Mookandi   / 2014 ஜூலை 18 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரஸீன் ரஸ்மின்


முல்லைத்தீவு மாவட்டத்தின் கறைத்துறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட குமாரபுரம் மற்றும் முள்ளியவளை கிழக்கு ஆகிய பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பொதுநோக்கு மண்டபத்திலுள்ள பொதுக்கிணற்றில் நீர் இல்லாமையினால் பொதுமக்கள் உள்ளிட்ட உத்தியோகஸ்தர்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கறைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தின் அனுமதியுடன் அரச சார்பற்ற நிறுவனமொன்றினால் இரு கிராமங்களிலும் நிர்மாணிக்கப்பட்டுள்ள பொது மண்டபங்களில் உள்ள குறித்த பொதுக்கிணறுகள் ஐம்பது அடிக்கும் கூடுதலான ஆழத்தைக் கொண்டுள்ள போதிலும் அக்கிணற்றில் சிறிதளவு கூட நீர் இல்லாமல் வெற்றுக்கிணறுகளாக காட்சியளிப்பதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.

இதனால் குறித்த பொதுமண்டபத்தில் இருந்து கடமைபுரியும் கிராம உத்தியோகஸ்தர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்ட கிராம அபிவிருத்தி சங்கம், கமக்கார அமைப்பு உட்பட, அங்கு நடைபெறும் பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ளும் பொதுமக்கள் என பலரும் நீரின்றி கஷ்டப்படுவதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X