2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வடமாகாண பிரதம செயலாளரின் வாகனம் மோதியதில் ஒருவர் படுகாயம்

Thipaan   / 2014 ஓகஸ்ட் 14 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


கிளிநொச்சி காக்கை கடைச்சந்தியில் வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ் பயணித்த வாகனம் மோதியதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிவகாமி சுதாகரன் என்பவர் காலை இழந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் வியாழக்கிழமை (14) தெரிவித்தனர்.

இவ் விபத்து தொடர்பாக பொலிஸார் கூறுகையில்,

முன்னால் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் சந்தியில் திரும்ப முற்பட்ட வேளை, பின்னால் வந்த பிரதம செயலாளருடைய வாகனம் மோதியது.

இதில் படுகாயமடைந்தவர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரதம செயலாளருடைய வாகனத்தைப் பொலிஸ் நிலையத்துக்;கு எடுத்துச் சென்றதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாக கிளிநொச்சிப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X