2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மருத்துவ உபகரணம் கையளிப்பு

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 21 , மு.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா பொது வைத்தியசாலைக்கு அவசர சிகிச்சை பிரிவில் பயன்படுத்தப்படும் மருத்துவ உபகரணமொன்று புதன்கிழமை(20) கையளிக்கப்பட்டது.

அண்மையில் அவுஸ்திரேலியாவுக்கு விஜயத்தை மேற்கொண்ட வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம் இலங்கையைச்சேர்ந்த வைத்தியர்களை அங்கு சந்தித்தார்.

இதன்போது அவர்களால் கையளிக்கப்பட்ட அவசர சிகிச்சை பிரிவில் பயன்படுத்தப்படும் இயந்திரத்தினை வவுனியா மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் பரமாநந்தம் யோகாநந்திடம் இவர் கையளித்திருந்தார்.

இந்நிகழ்வில் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி கு.அகிலேந்திரன் மற்றும் வைத்திய நிபுணர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுவரும் சிறுநீரக நோயாளிகளுக்கான இரத்தமாற்று சிகிச்சை நிலையத்தின் நிர்மாணப்பணிகளையும் வட மாகாண சுகாதார அமைச்சர்  இதன்போது பார்வையிட்டார்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X